Breaking News
Home / அரசியல் / சென்னை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை.10 செப்டம்பர்.2018

மதுரவாயல் தொகுதியில் 148 வது வட்டத்தில் உள்ள கோவர்த்தன நகர் பகுதியில் உள்ள 4,5 மற்றும் 8 ஆகிய தெருக்களுக்கு பல வருடங்களாக மழை நீர் வடிகால் வசதி செய்து தரப்படாமல் உள்ளது, இது சம்பந்தமாக பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை, எனவே தமிழ்நாடு இளைஞர்கட்சி மற்றும் பொதுமக்கள் இணைந்து, சென்னை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்…

அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம்🙏

மதுரவாயல் தொகுதியில் 148 வது வட்டத்தில் கோவார்த்தன நகரில் உள்ள தெருக்களுக்கு நீண்ட வருடங்களாக மழை நீர் வடிகால் வசதி செய்யப்படாமல் உள்ளது,. (இங்கு 500 மேற்ப்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்) இது குறித்து மாநகராட்சியில் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,. எனவே இன்று (09/09/2018) காலை 9 மணிக்கு,  போராட்டம் நடைபெற்றது.

;

MR மெட்ரிக்குலேசன் பள்ளி அருகில்.நெற்குன்றம். மதுரவாயில் தொகுதி.

1.இதுதொடர்பாக மக்கள் அனைவரும் கையெழுத்திட்டு புகார் கடிதம் ஒன்றை கடந்த 8 மாதத்திற்கு முன் மாநகராட்சி அலுவகத்தில் (Zonal Officer) கொடுத்தோம் 2.அம்மா அழைப்பு மையத்திற்கு 20 முறைக்கு மேல் போன் செய்துள்ளோம்
3. CM Cell க்கு இரண்டு முறை புகார் கடிதம் அளித்துள்ளோம், 4.சென்னை மாநகராட்சியின் இலவச எண் 1913 என்ற எண்ணிற்கு 30 முறைக்கு மேல் புகார் அளித்துள்ளோம், 5.சென்னை மாநகராட்சி ஆணையரிடம் ஒவ்வொரு வீட்டிலும் இருந்து தனித்தனியாக புகார் கடிதம் கொடுத்துள்ளோம், 6.மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான திரு. பெஞ்சமின் அவர்களிடமும் இது தொடர்பாக புகார் கடிதம் கடந்த மாதம் கொடுத்தோம்
7.இரண்டு மாதத்திற்கு முன்பு தினத்தந்தி நாளிதழில் நகரம் என்ற தலைப்பில் இது குறித்து கட்டுரை ஒன்று வெளியானது.

இவ்வளவு புகார்கள் அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,என்று

தமிழ்நாடு இளைஞர்கட்சி யின் திருவள்ளுவர் மாவட்ட  தலைவர் சண்முகம் அவர்கள் இந்த போராட்டத்தை முன் நின்று நடத்தும்போது உடன் மகளிர் அணி தலைவர்  ஸ்வப்னா  அவர்களும் கலந்து கொண்டு தெரிவித்தனர்.

சண்முகம்
9884174999/9841938660.

About Admin

Check Also

நந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் ஜாமினில் விட நீதிமன்றம் மறுத்தது

👆 *நந்தினி மற்றும் அப்பா ஆனந்தன் இருவரையும் ஜாமீனில் விட மறுத்தது திருப்பத்தூர் நீதிமன்றம்..* நந்தினி, ஆனந்தன் இருவருக்கும் ஜாமீன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *