Breaking News
Home / செய்திகள் / 5 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா கைது

5 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா கைது

5 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா கைது

👆 *5 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா கைது :

“IPC 328ன் படி போதைப்பொருள் விற்பது குற்றம்”.

டாஸ்மாக் மூலம் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்கும் அரசையும் அதற்கு உடந்தையாக உள்ள நீதிமன்றத்தையும் கண்டித்து, இன்று முதல் (8.7.2019) காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்க இருந்தார் *நந்தினியின் தங்கை நிரஞ்சனா.*

மதியம் 1.30 மணிக்கு மதுரை சட்டக்கல்லூரி முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்க இருந்த நிலையில், காலை 9 மணிக்கே போலீஸ் வீட்டிற்கு வந்து நிரஞ்சனாவை வலுகட்டாயமாக கைது செய்து அழைத்து சென்றது.

மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தற்போது போராட்டத்தை தொடர்கிறார்..

IPC 328-ன் படி டாஸ்மாக் சட்டவிரோதம்.
சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்று மக்களை படுகொலை செய்பவர்களை சிறையில் அடைக்க வேண்டிய நீதிமன்றம்..

*ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை? டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றமில்லையா ?* என கேள்வி கேட்ட நந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் 27.8.2019 முதல் 15 நாட்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டு சிறையில் அடைத்தது..

இன்று நிரஞ்சனாவின் உண்ணாவிரத போராட்டத்தை தடுக்க போலீஸ் கைது செய்திருக்கிறது.

IPC 328-ன் படி *டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றமில்லையா ?* என்ற கேள்வி சட்டத்தை மதிக்காத ஆட்சியாளர்களுக்கும் நீதிபதிகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இக்கேள்வியை டாஸ்மாக் கடைகளை மூட நினைக்கும் அனைவரும் கேட்போம்..

About Admin

Check Also

கிராம சபையில் தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று மக்களுக்கு விழிப்புணர்வு மக்கள் ஆதரவு

தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டங்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகளும் கூட்டத்தில் ஆர்வமாக கலந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *